Tuesday, March 19, 2024

 

Annual Festivals - September

Puraddasi Sani Viratham – புரட்டாசி சனி விரதம்

Puraddasi Sani Viratham

Puraddasi Sani also called Puraddasi Sani Viratham comes every Saturday in the Tamil month of Puraddasi is auspicious and is observed by Hindus following the traditions and rituals practised by ancestors and fasting in order to remove any affliction by Saneswaran (Sani Thosham).

God worship combined with fasting will cleanse the body, mind and soul. On this note it can be said that Puraddasi Sani Viratham is an older and best way to attain this.

It is known that Saneswaran weighs up ones sins and gives benefits accordingly. Those who observe Sani Viratham regularly will have long and healthy life with Saneswaran’s blessings. There is a saying which goes as “Saniyai pol kodupparum Illai Saniyai pol kedupparum ilai” which means there is no one like Saneswaran who will give plenty and also will destroy everything. When his bad influence is over he will give all the wealth, health and happiness.

Fasting rituals:

Saneswaran’s vehicle is crow; colour is black and his grain is gingelly seeds. Hence when you fast on a Puraddasi Sani day you apply gingelly oil and bathe, have a small bundle of gingelly seeds in a black cloth and burn this in a clay pot with gingelly oil in a Sivan or Perumal temple.

After this you participate in the Saturday rituals in the temple in order to receive the blessings of Lord Vishnu. After which you return home and before you break the fast, offer a portion of your meals to the crow, the Saneswaran’s vehicle and then you take your meals thus ending the fast.


புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதம் புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்.

உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் வேண்டி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்தாகும். அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் எனலாம்.

அவரவர் செய்த வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனீஸ்வரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை என்று சோதிடம் கூறுகின்றது.

இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ்விராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் நன்மைகளை கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஒரு நம்பிக்கை.

விரத முறைகள்:
சனீஸ்வரனின் தானியம் எள் வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். ஆகவே சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை தேய்த்து ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் அதாவது நல்லெண்ணை விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபடுதல் முறையாகும்.

அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டு தேவாரம் அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபடல் வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்த வேண்டும்.