Tuesday, March 19, 2024

 

 Annual Festivals – May

Vaikasi Visakam – வைகாசி விசாகம்

Vaikasi Visakam

Vaikasi Visakam comes on the full moon day in the month of Vaikasi when the star is Visakam (May – June). It was the day of divine creation of Lord Murugan to destroy the evil Asuras and alleviate the sufferings of Devas. It is also called Shanmuga Avatharam.

On this day special Poojas are performed to Lord Muruga and poems like Skantha Shasti Kavasam addressed to Lord Muruga are recited with much devotion. Tamils believe that these poems, Kavasam, protect them from evils.
Valli Kalyanam is also celebrated in Murugan Temples on Vaikasi Visakam day.

It is an important day for Buddhists as well; it is the day of the great miracles of birth, enlightenment and Maha Samadhi of Buddha.

வைகாசி விசாகம்

வைகாசி மாதம் பறுவத்திலன்று விசாக நட்சத்திரத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படும். இது தீங்கு விழைவித்த அசுரரை அழித்து தேவர்களின் துக்கத்தை போக்கிவிட வந்த முருகக் கடவுள் அவதாரம் எடுத்த தினமாகும். சிலர் இத்தினத்தை சண்முக அவதாரம் என்றும் கூறுவர்.

இந்த நாளில் முருகக் கடவுளுக்கு விசேட பூசையும் வழிபாடுகளும் முருகனை நினைத்து ஸ்கந்தஷஷ்டி கவசமும் பாடி வழிபடுவார்கள். கவசத்தைப் பக்தியுடன் பாடினால் தாங்கள் பழி பாவத்திலிருந்து காப்பாற்றப் படுவார்கள் என்று தமிழர்கள் நம்புகின்றார்கள்.

முருகன் கோவில்களில் வள்ளி கல்யாணமும் இன்று கொண்டாடப்படுகிறது.

புத்த சமையத்தவர்களுக்கும் இது முக்கிய நாளாகும். இத்தினத்தில் புத்த பெருமான் பிறந்ததும், ஞான உபதேசம் பெற்றதும், மகா சமாதி அடைந்ததுமாகும்.